News September 14, 2024
ஆம்பூா் ஏ-கஸ்பாவில் MLA அலுவலகம் கட்ட ஒப்புதல்

ஆம்பூா் ஏ-கஸ்பா மந்தகரை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அரசு அலுவலகம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி நேற்று நடைபெற்ற ஆம்பூா் நகா்மன்ற அவசர கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், ஆணையா் சந்தானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Similar News
News July 9, 2025
இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஸ்ரேயா குப்தா அறிவுறுத்தலின்படி திருப்பத்தூர் மாவட்ட பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகநூல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சாலையில் வாகனங்களின் கதவை திறக்கும் போது பின்னால் வாகனம் வருகிறதா என்பதை கவனித்து பின் திறக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பதிவை பதிவிட்டுள்ளனர். இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஷேர் பண்ணுங்க.
News July 8, 2025
வீட்டு வாடகை ஒழுங்குமுறை சட்டம் சொல்வது என்ன? (2/2)

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கான புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்.