News December 28, 2025
ஆம்பூர்: வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது!

ஆம்பூர் அடுத்த பி கஸ்பா பகுதியை சேர்ந்த தீபக் (28) மற்றும் விக்கி (28). இருவருக்கிடையே சில நாட்களுக்கு முன்பாக தகராறு ஏற்பட்டது. இது கை கலப்பாக மாறவே, விக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபக்கை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த தீபக் ஆம்பூர் அரசு மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் அடிப்படியில் நேற்று போலீசார் விக்கியை கைது செய்தனர்.
Similar News
News December 28, 2025
திருப்பத்தூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
திருப்பத்தூர்: மதுபோதையில் வெறிச்செயல்!

வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியில் உள்ள உணவகத்தில் நேற்று (27) அப்பகுதியை சேர்ந்த ஜெகன் பிரசாத், பாஸ்கர், மணிகண்டன், சிரஞ்சீவி மற்றும் குகன் ஆகியோர் மதுபோதையில் உணவு சாப்பிட சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பாஸ்கர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெகன் பிரசாத் மற்றும் மணிகண்டனை தலையில் வெட்டியுள்ளார். இதுகுறித்து அம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 28, 2025
திருப்பத்தூரில் சிறுவனை கடித்து குதறிய நாய்!

ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணீஷ் என்ற சிறுவன் நேற்று (டிச.27) வக்கணம்பட்டி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த நாய் சிறுவனை கடித்தது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


