News March 29, 2024
ஆம்பூர் வந்த வில்லன் நடிகர்

ஆம்பூர் தனியார் தோல் தொழிற்சாலை முன்பு இன்று மாலை 6 மணியளவில் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் அவருடன் சென்று செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
Similar News
News December 25, 2025
திருப்பத்தூர்: கிறுஸ்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறுஸ்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01-11-2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறுஸ்தவ மத பயனாளிகளிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 28-02-2026-க்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம் முதல் தளம், சேப்பாக்கம் சென்னை. என நேற்று (டிச-24) மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
News December 25, 2025
திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

ஆம்பூர் அருகே உள்ள மேல்பட்டி பச்ச குப்பம் ரயில் நிலையங்கள் இடையே சுமார் 65 வயதி மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அங்குள்ள தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 25, 2025
ஆம்பூர் அருகே அதிரடி கைது!

திருப்பத்தூர்: ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று(டிச.25) மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில். வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஆம்பூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கன் மகன் சீனிவாசன்(42) என்பவரின் பைக்கை சோதனை செய்தனர். அதில், 180 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது பாட்டில்களை பறிமுதல் செய்து, சீனிவாசனை கைது செய்தனர்.


