News December 22, 2025
ஆம்பூர்: ரயில் மோதி கொடூர பலி!

ஆம்பூர் அடுத்த வளத்தூர்-மேல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (டிச.22) 55 வயது மதிக்கத்தக்க முதியவர் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஒரு ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 23, 2025
திருப்பத்தூர்: 5-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று (டிச.23) தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை கைவிடவும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடைபெறுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News December 23, 2025
திருப்பத்தூர் காவல்துறை அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் புகைப்படத்துடன் கூடிய எச்சரிக்கை செய்தி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது வருகிறது. இதில் இன்று (டிச-23) வெளியிட்டுள்ள செய்தியில் “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்” என எச்சரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக வாகனம் ஒட்டும்படி அறிவுறுத்தப்படுகிறது.
News December 23, 2025
திருப்பத்தூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!


