News March 18, 2024
ஆம்பூர் அருகே ராணுவ வீரர்கள் வாகனம் விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 2 மணிக்கு ராணுவ வீரர்கள் வந்த வாகனம் விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பல ராணுவ வீரர்களுக்கு காயமடைந்துள்ளனர்.
Similar News
News August 7, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 7, 2025
வாணியம்பாடி கவுன்சிலர்களுக்கு மிரட்டல்

வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றும் 36 வார்டு கவுன்சிலர்களுக்கு இன்று மர்மநபர் ஒருவர் கடிதம் மூலம் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கவுன்சிலர்கள் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News August 7, 2025
திருப்பத்தூர்: ஆம்புலனஸில் பிறந்த பெண் குழந்தை

ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியை சேர்ந்த பெண் பிரசவத்திற்க்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களை பலர் பாராட்டி வருகின்றனர்.