News December 28, 2024
ஆம்பூரில் 2 போலி மருத்துவர்கள் கைது

ஆம்பூர் அருகே மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ துறை இணை இயக்குனருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்று தீவிர ஆய்வு மேற்கொண்டு கண்டுபிடித்தனர். இதனையடுத்து, கிளினிகிற்கு சீல் வைக்கப்பட்டது.
Similar News
News March 8, 2026
திருப்பத்தூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
திருப்பத்தூர்: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்
News March 8, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


