News October 21, 2025
ஆம்பூரில் தலைமை ஆசிரியரை தாக்கிய கூலி தொழிலாளி கைது

ஆம்பூர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹபிபுல்ல ரூபி வயது (58) இவரை
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 4 பேர் இவரை டி.ஷர்ட் மூலமாக அவரது கழுத்தை நெருக்கியுள்ளனர். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் கழுத்தை நெரித்த அல்த்பாஷா மகன் மலீம் பாஷா வயது (31) கூலி தொழிலாளியை நேற்று (அக். 20) இரவு கைது ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 5, 2026
அறிவித்தார் திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், காவலூர், அம்பலூர், வாணியம்பாடி, உமராபாத், குருசிலாப்பட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி காவல் நிலையங்கள் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் 13 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பணி மாறுதல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
News February 5, 2026
வாணியம்பாடி: அரசு மருத்துவர் தற்கொலை!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக கடந்த பல மாதங்களாக பணியாற்றி வந்த, சிவசுப்பிரமணியம் என்பவர் நேற்று (04.02.2026) வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில், சிவ சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 5, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.4) இரவு முதல் இன்று (பிப்.5 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


