News November 23, 2024
ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது

சிவகாசியிலிருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம்(நவ.21) இரவு ஆம்னி பேருந்து ஒன்று 6 பயணிகளுடன் சென்றது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் டீசல் டேங்க் மீது மோதியதில் டீசல் டேங்க் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் என்பவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சிவகாசி போலீசார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மாரீஸ்வரனை கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
விருதுநகர்: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

விருதுநகர் வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்க <
News December 20, 2025
விருதுநகர்: ஒரேநாளில் இரண்டு கொலைகள்

விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 2 கொலைகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்தியசேனையில் பட்டாசு ஆலை காவலாளியாக பணியாற்றிய செல்லச்சாமியை (57) கால்நடை தீவனம் பறிக்க வந்த படுகளம் (64) என்பவர் வெட்டி கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் ராஜபாளையம் சமுசிகாபுரத்தை சேர்ந்த வேல்முருகனை (37), மது போதையில் பாலமுருகன் (24) என்பவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார்.
News December 20, 2025
விருதுநகர்: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தேனி மாவட்டம் வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிச்சைமணி(47). இவர் விருதுநகர் மாவட்டம் ஊத்தாங்கல் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த போது, கடந்த மே மாதம் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளி பிச்சைமணிக்கு 5 ஆண்டுகள் சிறை, அபராதம் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


