News October 21, 2024

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம்

image

தீபாவளியையொட்டி 28ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு, தினசரி பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதுபோல நவ.2 ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதிவரை 12,606 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 18004256151, 044-26280445 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Similar News

News September 13, 2025

சென்னையில் இன்று மின்தடை

image

சென்னையில் இன்று (செப்.13) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அடையாறு, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (ஷேர் பண்ணுங்க)

News September 13, 2025

அரும்பாக்கம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

ஓட்டேரியை சேர்ந்த 31 வயது பெண், ரேபிடோ பைக் ஓட்டி வருகிறார். இவர் கோயம்பேடு முதல் அரும்பாக்கம் வரை வாடிக்கையாளரை அழைத்துச் செல்லும்போது, ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அரும்பாக்கத்தில் வாகனத்தை நிறுத்தி கேள்வி எழுப்பியபோது, பொதுமக்கள் வருவதை பார்த்து அவன் தப்பியதால், பெண் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பரை கைது செய்தனர்.

News September 13, 2025

சென்னை: கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

சென்னை மக்களே இன்று 13-ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே<> கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!