News November 10, 2025
ஆப்பிரிக்காவில் 5 தமிழர்கள் கடத்தல்!

ஆப்பிரிக்காவின் மாலியில் மின்மயமாக்கல் பணிக்காக சென்ற தமிழக தொழிலாளர்கள் 5 பேரை ஆயுத கும்பல் கடத்தி சென்றுள்ளது. அவர்கள் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த இசக்கிராஜா(36), தளபதி சுரேஷ்(26), புதியவன்(52), பொன்னுதுரை (41), பேச்சிமுத்து(42) என தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மற்ற இந்தியர்களை பாதுகாப்பாக தலைநகர் பமாகோவுக்கு மாற்றியுள்ளனர். இந்திய தூதரகம் விசாரணை நடத்தி வருகிறது.
Similar News
News November 10, 2025
ஜார்க்கண்டில் I.N.D.I.A கூட்டணி உடைகிறதா?

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது. இதில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும்( ஜேஎம்எம்) இடம் பெற்றது. ஆனால், அக்கட்சிக்கு 2 தொகுதிகள் கூட ஒதுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சுதிப்ய குமார், இதற்கு சரியான பதிலடியாக ஜார்க்கண்டில் ஆர்ஜேடி, காங்., உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என கூறியுள்ளார்.
News November 10, 2025
அதிக லைக்ஸ் பெற்ற இன்ஸ்டா பதிவுகள் இவைதான்!

இன்றைய உலகம் இன்ஸ்டாகிராமில் தான் வசித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான போஸ்ட்களை பார்க்கிறோம். ஆனால், உலக மக்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்து, அதிக Likes பெற்ற போஸ்ட் எது என்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து எந்த போட்டோ, அதிக Likes-ஐ பெற்றுள்ளது என பாருங்கள். இதில், நீங்க எந்த போஸ்டுக்கெல்லாம் Like போட்டிருக்கீங்க?
News November 10, 2025
EPS ஒரு கடைந்து எடுத்த அடிமை: உதயநிதி

திமுக அறிவுத் திருவிழாவை நடத்தியுள்ளது, அதிமுக அடிமைத் திருவிழா நடத்தலாம் என DCM உதயநிதி விமர்சித்துள்ளார். EPS ஒரு கடைந்து எடுத்த அடிமை என சாடிய அவர், அதிமுக என்ற போர்வையை போற்றிக் கொண்டு பாசிச பாஜக தமிழ்நாட்டில் ஊடுருவ பார்க்கிறது என்றார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று, CM ஸ்டாலின் மீண்டும் CM ஆக பொறுப்பேற்க வேண்டும் என கூறினார்.


