News December 23, 2025

ஆப்கன் வாழ்க்கை இவ்வளவு பயங்கரமானதா?

image

சொந்த ஊரில் பயணிக்கும் போது கூட குண்டு துளைக்காத காரில் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார். யாரும் என்னை குறிவைத்து சுடமாட்டார்கள், இருப்பினும் எச்சரிக்கை உணர்வு காரணமாக இப்படி செல்வதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஆப்கனில் இது சாதாரண விஷயம்; பல முக்கியஸ்தர்கள் புல்லட்புரூஃப் வாகனங்களில் தான் பயணிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 28, 2025

அதிமுகவில் இணைகிறாரா கே.சி.பழனிசாமி?

image

கே.சி.பழனிசாமி அதிமுகவில் இணையலாம் என பேசப்பட்ட நிலையில், அதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அதிமுக தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற அவர், பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், CM ஆக வேண்டும் என EPS-க்கு எண்ணம் இருந்தால் தற்போது தனித்தனியாக பிரிந்திருப்பவர்களை இணைத்து அதிமுக மேடையில் நிறுத்தலாம் எனவும் தனது மனதில் இருப்பதை போட்டுடைத்தார்.

News December 28, 2025

மாதவிடாய் நேரத்தில் இத குடிக்காதீங்க!

image

பொதுவாகவே காஃபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு அது Addict. ஆனால் காஃபியை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிலும் பெண்கள் சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤கர்ப்ப காலத்தில் குடிக்க கூடாது ➤தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் காஃபியை தவிர்க்க வேண்டும் ➤மாதவிடாய் காலத்தில் குடித்தால் மன அழுத்தம் அதிகமாகும் ➤ரத்தசோகை உள்ளவர்கள் குடிக்க கூடாது. SHARE.

News December 28, 2025

BREAKING: அதிகாலையில் தமிழக மீனவர்கள் அதிரடி கைது

image

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகு, மீன்கள், வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபருடன் இந்திய மீனவர்கள் பிரச்னை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனாலும், கூட கைது நடவடிக்கை தொடர்வது மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!