News November 10, 2025
ஆப்கன் – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

துருக்கியில் நடந்து வந்த ஆப்கன் – பாகிஸ்தான் இடையேயான, 3-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானின் நியாயமற்ற கோரிக்கைகள் தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என ஆப்கன் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், போரில் ஈடுபடுவது தங்களது நோக்கமல்ல எனவும், ஆனால், போர் தொடங்கினால், தங்களை தற்காத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 10, 2025
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மையம்

தென்காசி மாவட்டத்தில் SIR படிவங்கள் சமந்தமான சந்தேகங்களுக்கு தொகுதி வாரியான எண்கள் உள்ளது. இந்த எண்களுக்கு அழைத்து உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள்.
1.ஆட்சியர் அலுவலகம் 04633-210074 046331950
2. கடையநல்லூர் – 04633-222212 04633245666
3. ஆலங்குளம் – 04633270899 9944096957 04636223030
4. சங்கரன்கோவில் (தனி) – 04636223030
5. வாசுதேவநல்லூர் (தனி) – 04636250223 SHARE!
News November 10, 2025
பாஜகவிற்கு ஆதரவு இல்லை.. வெளிப்படையாக அறிவிப்பு

நாங்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட கட்சியையோ, அரசியல் தலைவரையோ ஆதரிப்பதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். நாங்கள் ராமர் கோயிலை கட்ட விரும்பினோம், அதனால் தான் பாஜகவை ஆதரித்தோம். ஒருவேளை காங்கிரஸ் கட்சி ராமர் கோயிலை கட்ட விரும்பியிருந்தால், அக்கட்சியை ஆதரித்து இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கொள்கைக்குதான் ஆதரவு, கட்சிக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
விநாயகர் போல் காட்சி அளிக்கும் முருகர் கோயில் மலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையானது பார்ப்பதற்கு யானை உட்கார்ந்த நிலையில், துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இருக்கும். முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் காட்சியளிக்கின்றார். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர பக்தர்கள் முருகனை வணங்கி செல்கின்றனர்.


