News February 18, 2026
ஆபாச வீடியோக்கள் உலா.. அமைச்சர் கிடுக்குப்பிடி

இணையத்தில் ‘Deep fake’, ‘AI’ மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லியில் AI உச்சி மாநாட்டில் பேசிய அவர், இதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பார்லிமென்ட் குழு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், நவீன உலகில் எது உண்மை, எது பொய் என்பதை மக்கள் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றார்.
Similar News
News February 18, 2026
‘AI’ வளர்ச்சி குறித்து பேசிய PM மோடி – சுந்தர் பிச்சை!

டெல்லியில் PM மோடியை, கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் AI துறையில் செய்து வரும் பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக PM மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக AI மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக சுந்தர் பிச்சை கூறியிருந்தார். வரும் 20-ம் தேதி AI மாநாட்டில் அவர் பேச உள்ளார்.
News February 18, 2026
ஸ்டாலினா? மம்தாவா? உடனே முடிவு செய்யுங்கள்: சிவசேனா

தலைவரை முதலில் தேர்ந்தெடுங்கள் என்று இண்டியா கூட்டணிக்கு சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா ஆலோசனை தெரிவித்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து, கூட்டணியை ஒருங்கிணைக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினா, மம்தாவா, அல்லது வேறு ஒருவரா என்பதை உடனே முடிவு செய்யுங்கள் என்றும், உங்களுக்குள் மோதிக் கொள்வதை தவிர்க்காவிட்டால் அது கூட்டணிக்கு ஆபத்தாகும் என்றும் அது எச்சரித்துள்ளது.
News February 18, 2026
₹6,000 வரை விலை உயருகிறது.. உடனே வாங்குவது நல்லது!

கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், நடப்பு காலாண்டுக்குள் AC விலை 10 – 15% வரை விலை உயரும் என அத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளார். மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பு, AC தயாரிப்புக்கு முக்கியமான செம்பு விலை உயர்வு, அந்நியச் செலாவணி மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாம். இதனால், சுமார் ₹40,000-க்கு விற்பனையாகும் ஒரு AC-ன் விலை சுமார் ₹6,000 வரை விலை உயரும் எனக் கூறப்படுகிறது.


