News December 28, 2025
ஆபரேஷன் சிந்தூர்: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட சேதங்களை இதுவரை மறுத்து வந்த பாகிஸ்தான், முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. தாக்குதலில், பாக்.,-கின் நூர் கான் விமானப்படை தளம், முக்கிய ராணுவ நிலைகள் பலத்த சேதமடைந்ததாக அந்நாட்டின் துணை பிரதமர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். 80-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை கொண்டு இந்தியா நடத்திய தாக்குதலில், வீரர்கள் பலர் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News December 31, 2025
சதத்தால் மிரட்டிய கேப்டன் ருதுராஜ்

விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிர அணியை சரிவில் இருந்து கேப்டன் ருதுராஜ் மீட்டெடுத்தார். 50 ரன்களுக்கு 3 விக்கெட்டை அந்த அணி இழந்த நிலையில், களம்புகுந்த ருதுராஜ் உத்தரகாண்ட்டின் பவுலிங்கை வெளுத்து வாங்கினார். 113 பந்துகளில் 124 குவித்து அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் 50 ஓவர்களில் மகாராஷ்டிரா 331 ரன்களை குவித்தது.
News December 31, 2025
பிறப்பு விகிதத்தில் இந்தியா சாதனை!

2025-ன் உலகளாவிய பிறப்பு விகித புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2.31 கோடி பிறப்புகளுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2025-ல் உலகெங்கும் தினமும் பிறந்த 6 குழந்தைகளில் ஒன்று இந்தியக் குழந்தை! சீனாவை (8.7 மில்லியன்) பின்னுக்குத் தள்ளி இந்தியா இந்த சாதனை படைத்துள்ளது. உலகில் மொத்தமாக 13.23 கோடி குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இதில் பாதியளவு பேர் ஆசிய கண்டத்தில் தான் பிறந்துள்ளனர்.
News December 31, 2025
BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை ₹960 குறைந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2-வது முறையாக தாறுமாறாக குறைந்துள்ளது. காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹400 குறைந்த நிலையில், மாலையில் ₹560 குறைந்தது. இன்று மட்டும் ₹960 குறைந்ததால், ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹99,840-க்கும், கிராமுக்கு ₹12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


