News November 22, 2025
ஆபரேஷன் சிந்தூரால் சீனாவுக்கு லாபம்: USA

இந்தியா – பாக்., போரை, சீனா சோதனை களமாக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தங்களது நவீன ஆயுதங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை உலகிற்கு காட்டவும், பிறநாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டதாக கூறியுள்ளது. சீனாவின் HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு, PL-15 ஏவுகணைகள், J-10 போர் விமானங்களை பாக்., போரில் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
21 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதை

பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரது தமிழ் தொண்டினை கௌரவிக்கும் விதமாக போலீஸ் மரியாதை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள மின் இடுகாட்டில் இன்று (நவ.23) அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
News November 23, 2025
சர்வதேச விழாவில் ராணுவத்தை பெருமைப்படுத்திய SRK

மும்பையில் நடந்த சர்வதேச அமைதி விருதுகள் விழாவில், மும்பை (26/11), பஹல்காம், டெல்லி தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாருக்கான் அஞ்சலி செலுத்தினார். பின்பு, பாதுகாப்பு படையினரை குறிப்பிட்டு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என யாராவது கேட்டால், நாட்டை பாதுகாக்கிறேன் என்று சொல்லுங்கள்; என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டால், 140 கோடி மக்களின் ஆசிர்வாதங்களை சம்பாதிக்கிறேன் என்று சொல்லுங்கள் என்றார்.


