News October 18, 2025
ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பண மோசடி – காவல்துறை

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டு இருக்கும் செய்தி தொகுப்பு தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனைகள் நடைபெற்று வருவதாகவும், அப்படி நடைபெறும் ஆன்லைன் பட்டாசு விற்பனையில் பண மோசடிகள் நடைபெறுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் பட்டாசு வாங்கும் போது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 18, 2025
நெல்லை: கார் கண்ணாடி சண்டையில் ஒருவர் கொலை!

ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிமெண்ட் வியாபாரி அருண்செல்வம் (33), தனது அண்ணனுக்கும் இசக்கிமுத்து என்ற போஸ் என்பவருக்கும் இடையே கார் கண்ணாடி உடைப்பு சமந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது . நேற்று நெல்லையில், போஸ் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளை மோதி அருண்செல்வத்தை கீழே தள்ளி, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தடுக்க வந்த நண்பருக்கும் வெட்டு. இதுக்குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை.
News October 18, 2025
நெல்லை: வெள்ளம் பாதிப்புகள் புகார் எண்கள்!

நெல்லையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 18, 2025
நெல்லை: சிறையில் இருந்த முன்னாள் காவலர் உயிரிழப்பு!

குமரி மாவட்டம், தோவாளை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீசார் ஜோசப் ராஜ் (74), 1999ம் ஆண்டு தூத்துக்குடியில் போலீஸ் காவலில் வின்சென்ட் என்பவர் இறந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கபட்டிருந்தார். நெல்லை, பாளையங்கோட்டை சிறையில் இருந்த அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை.