News October 25, 2024
ஆன்லைன் பட்டாசு மோசடி: போலீசார் எச்சரிக்கை

சென்னையில் உள்ள பொதுமக்கள், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலை தளங்களில் தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்வதாக வரும் பொய்யான விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்று சென்னை பெருநகர போலீசார் மற்றும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் வாங்குவதற்கு பதிலாக நேரில் சென்று வாங்கவும் அறிவுறுத்தி உள்ளனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News February 4, 2026
2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு ரூ.10.354 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை மெட்ரோவின் 2-ஆம் கட்டத் திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.10.354 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில், OMR மேம்பால பாதையில், ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள், தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ரூ.63.246 கோடி மதிப்பிலான, இந்த திட்டப் பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகவலை சென்னை மெட்ரோ தலைமையகம் இன்று (பிப்.04) அறிவித்துள்ளது.
News February 4, 2026
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 4, 2026
சென்னை: தூக்கில் தொங்கிய மாணவன்

கோயம்பேடு அன்னம்மா நகர் 2-வது தெருவைச் பிரவீன் (19) ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பூட்டிய கதவை நீண்ட நேரமாக திறக்காததால் சதேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். * தற்கொலை எதற்கும் தீர்வல்ல*


