News May 23, 2024
ஆன்லைன் கடன் செயலி மோசடி; காவல்துறை எச்சரிக்கை

Google play store-ல் உள்ள அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்யப்பட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த செயலிகள் மூலம் தங்களின் கைபேசியிலுள்ள அனைத்து தொடர்புகள், புகைப்படங்கள் ஆகியவை திருடப்பட்டு உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கோ குடும்ப உறுப்பினர்களுக்கோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
Similar News
News April 3, 2026
ராணிப்பேட்டையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

ராணிப்பேட்டை ;வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News April 3, 2026
டீ போட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

தேர்தல் வந்துவிட்டாலே வேட்பாளர்கள் பல்வேறு விதமாக வாக்கு சேகரிப்பது வழக்கம். அதேபோன்று அரக்கோணம் தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நேற்று(ஏப்.2) மணியக்கார தெருவில் உள்ள ஒரு கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். நகர செயலாளர் பாண்டுரங்கன் கவுன்சிலர்கள், பாபு, நரசிம்மன் சரவணன் உடன் இருந்தனர்.
News April 3, 2026
அரக்கோணத்தில் தவெக வாக்கு சேகரிப்பு!

ராணிப்பேட்டை: அரக்கோணம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக காந்தி ராஜ் போட்டியிடுகிறார். இவர் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி மற்றும் நிர்வாகிகளிடம் சால்வை அணிவித்து வாக்கு சேகரித்தார். வேட்பாளர் காந்திராஜ் ரயில் பயணிகள் சங்க உறுப்பினராக உள்ளார்.


