News October 21, 2024
ஆன்லைன் ஆஃப் மூலம் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை

செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்த யுவராஜ்(27) என்பவருக்கு 6 மாத பெண்குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்த இவர், ஒரு மாதமாக வேலைக்கு செல்லாத காரணத்தினால், குடும்ப செலவுக்கு ஆன்லைன் ஆஃப் மூலம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News August 14, 2025
மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
News August 14, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் (13/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 14, 2025
கோவளத்தில் வாட்டர் மெட்ரோ வரப்போகிறது

கொச்சியை போல சென்னை கோவளத்தில் வாட்டர் மெட்ரோ கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
நீர்வளத் துறை (WRD) வாட்டர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதன் முதல்கட்டமாக கூவம் நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுத்து தூர்வாரப்படும். என தமிழக அரசு தெரிவித்துள்ளது.