News August 26, 2024
ஆனைவாரி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆத்தூர், கல்லநத்தம் கிராமத்தில் ஆனைவாரி அருவியில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் முட்டல் ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். முட்டல் ஏரி அருகே உள்ள பூங்காவை சுற்றிபார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News August 23, 2025
சேலம் வழியாக இயக்கப்படும் 5 ரயில்கள் கோவை செல்லாது!

தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் நாளைய (ஆக.24) சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் நாளை கோவை செல்லாமல் போத்தனூரில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
News August 23, 2025
சேலத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்▶️சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)
News August 23, 2025
சேலம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

சேலம் மாவட்டத்தில் (ஆக.23) இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
▶️காலை 9 மணி அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நலத்திட்ட பணிகள் துவக்கம் சுற்றுலாத் துறை அமைச்சர்.
▶️காலை 10 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாவட்ட மாநாடு துவக்கம் குஜராத்தி திருமண மண்டபம் ஐந்து ரோடு.
▶️ காலை 10:30 ராமகிருஷ்ணா ஆசிரமம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ராமகிருஷ்ண மடம்.