News June 26, 2024
ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆனி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 98 ஆயிரத்து 914ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 181 கிராம் தங்கம், 1465 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
Similar News
News November 1, 2025
தி.மலை : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தி.மலை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 1, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

தி.மலை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
திருவண்ணாமலை: பிரபல நடிகை சாமி தரிசனம்

(நவ.1) திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பிரபல திரைப்பட நடிகையான தேவயானி அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார். பின் அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த அவரிடம் செல்பி எடுக்க விரும்பிய ரசிகர்களுடன் பொறுமையாக நின்று எடுத்தார்.


