News December 26, 2025
ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் CBI சம்மன்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த CBI விசாரணை சமீப நாள்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெகவின் முக்கிய நிர்வாகிகளிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவை டிச.29-ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 2, 2026
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக இப்படி வழிபடுங்கள்!

108 எண்ணிக்கையில் ₹1 நாணயங்கள், மாதுளம் பழ முத்துக்களை எடுத்து கொள்ளுங்கள். லட்சுமி படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, நெய் தீபம் ஏற்றி வையுங்கள். ஒரு ₹1 நாணயத்தையும், ஒரு மாதுளை முத்தையும் எடுத்து, ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ’ என கூறி அர்ச்சனை செய்யுங்கள். இப்படி 108 முறை செய்துவிட்டு, கற்பூர ஆரத்தி காட்டுங்கள். தொடர்ச்சியாக 48 நாள்கள் இந்த வழிபாட்டை செய்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை: திருச்சி சிவா

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்தரும் வகையில் இல்லை என திருச்சி சிவா கூறியுள்ளார். பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க 3 புதிய கோபுரங்கள் அமைப்பு போன்ற திட்டங்களை தமிழகம் கேட்கவில்லை என்ற அவர், CM ஸ்டாலின் கேட்ட ஜல் ஜீவன், கல்வியை மேம்படுத்தும் சமக்ர சிக்ஷா ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 2, 2026
FLASH: சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த வாரம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $48 (இந்திய மதிப்பில் ₹4,400) குறைந்து $4,847.00-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.


