News February 25, 2026

ஆத்தூர் அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி!

image

ஆத்தூர் மல்லியக்கரையைச் சேர்ந்த சிவலிங்கம் (25), நேற்று டூவீலரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். தாண்டவராயபுரம் அண்ணா நகர் அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 1, 2026

ஆத்தூரில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!

image

பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சந்துரு-வைஷ்ணவி மற்றும் கடம்பூர் சங்கவி-ராஜா ஆகிய இரு காதல் ஜோடிகளும், பெற்றோரின் எதிர்ப்பால் கோவில்களில் திருமணம் செய்துகொண்டு நேற்று ஆத்தூர் காவல் நிலையங்களில் பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இருதரப்பு பெற்றோர்களையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய அறிவுரைகளை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர்.

News March 1, 2026

சேலம் பழைய பேருந்துநிலையம் அருகே பயங்கர விபத்து!

image

சேலம் வீராணம் பள்ளிபட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், வலசையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மாநகரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2026

வாலிபர் மீது போக்ஸோ வழக்கு பதிவு

image

தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த மணி (24). இவரும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்தனர். இதுகுறித்து மாணவியை பெற்றோர் கண்டித்த நிலையில், மணி அந்த சிறுமியை அழைத்து சென்று நேற்று இரவு தனது பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார். இதனை தொடர்ந்து, இன்று காலை மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மணி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!