News January 12, 2026

ஆத்தூர் அருகே சம்பவ இடத்திலேயே பலி!

image

ஆத்தூர் வைத்திய கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் புதிய பைக் ஒன்று வாங்கியுள்ளார். இதனை எடுத்துக்கொண்டு ஆத்தூரில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று காண்பித்து விட்டு திரும்பியபோது, சென்னை தேசிய நெடுஞ்சாலை தளவாய்பட்டி பிரிவு சாலையில் நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 10, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.10) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News February 10, 2026

அமித்ஷா சேலம் வருகை? CLARITY

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 14-ல் சேலம் வருவதாகவும், அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத் தெரிவித்துள்ளார். அமித்ஷா வருகை குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News February 10, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!