News June 23, 2024

ஆத்தூரில் சாராயம் பதுக்கியவர் கைது

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூன் 22) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கல்லாநத்தம் பகுதியில் உள்ள மலைகளில் சாராயம் பதுக்கி வைத்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News May 7, 2025

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.4.85 கோடி வரி வசூல்!

image

சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியினை ஏப்ரல் 30- ஆம் தேதி வரை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை (அ) ரூபாய் 5,000 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் ரூபாய் 4.85 கோடி வரி வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை உள்ளிட்டவை ரூபாய் 52.05 லட்சம் வசூலாகியுள்ளது.

News May 7, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News May 7, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, மதுரை-பெங்களூரு சிறப்பு ரயில் (06522) இன்று (மே 01) காலை 09.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், 03.50 மணி நேரம் தாமதமாக மதியம் 01.00 மணிக்கு புறப்படும். இதனால் சேலம் ரயில் நிலையத்திற்கு மதியம் 02.20 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் மாலை 06.10 மணி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!