News November 7, 2024
ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி
திருவாரூரில் தாட்கோவின் மூலம் சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களுக்கு கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant- Intermediate), செயலாளர்-இடைநிலை (Company Secretary-Intermediate) செலவு மேலாண்மை கணக்காளர்-இடைநிலை (Cost Management Accountant Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News November 19, 2024
திருவாரூர் மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!
News November 19, 2024
மன்னார்குடி அருகே நூதன மோசடி: ஒருவர் கைது
மன்னார்குடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் பெண்களைப் போல் பேசி பல்வேறு நபர்களிடம் ஆன்லைன் வழியே ரூ.1.60 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய அரியலூர் மாவட்டம், பெரிய கிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரை திருவாரூர் சைபர் கிரைம் காவல் துறையினர் பிரசாந்த் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 18, 2024
திருவாரூர் மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 20 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.