News July 27, 2024

ஆதிச்சநல்லூரில் தொல்லியல் பயிற்சி பட்டறை வகுப்பு

image

ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் ஒரு நாள் தொல்லியல் பயிற்சி பட்டறை இன்று நடந்தது. இதில் தெற்கு கள்ளிகுளம் தட்சிணா மாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் சிவகளை தொல்லியல் கழகம் இணைந்து நடத்திய இந்த பட்டறையில் மரபு நடை பயணமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடம் கலை சிற்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

Similar News

News March 6, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News March 5, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் தேதி அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தலைவர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர்ல் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், சாத்தான்குளம் மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் தலா ஒரு அமர்வு உட்பட 15 அமர்வுகளில் நடைபெற உள்ளது.

News March 5, 2026

தூத்துக்குடி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

image

தூத்துக்குடியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் சல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது <>இங்கு கிளிக்<<>> செய்து அதில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.தகவலை SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!