News August 12, 2025
ஆதார் இல்லாததால் பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்

பூவிருந்தவல்லியை சேர்ந்த மாணவன்சந்தோஷ். இவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதார் அட்டை இல்லாததால் பல சிரமங்களை சந்தித்துள்ளார். இதற்காக கோயம்பேடு உள்ளிட்ட பல அலுவலகங்களுக்குச் சென்றும் பலன் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆதார் அட்டை இல்லாததால் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
Similar News
News August 12, 2025
தாம்பரம்: விமானப் படையில் ஆட்சேர்க்கை

அக்னிவீர் திட்டத்தில் இந்திய விமானப் படைக்கு ஆட்சேர்ப்பு வரும் செப்டம்பர் 2 முதல் 5ம் தேதி வரை தாம்பரம் விமானப் படை நிலையத்தில் நடக்க உள்ளது என சென்னை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ்-2ல் 50% தேர்ச்சியுடன் 18 முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆட்சேர்க்கையில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
News August 12, 2025
மகளிர் உரிமை தொகை பதிய இங்கு போங்க

சென்னையில் இன்று (ஆக.12) அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், ராயபுரம், பெருங்குடி ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை<
News August 12, 2025
இல.கணேசனுக்கு 3-வது நாளாக தீவிர சிகிச்சை

நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ந்தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் 3-வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்கை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.