News February 14, 2026

ஆதாரின் வடிவம் மாறப் போகிறது

image

ஆதார் கார்டு விரைவில் புதிய வடிவத்துக்கு மாறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர், முகவரி, ஆதார் எண் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் கார்டில் இருந்து நீக்கப்பட்டு, போட்டோ & QR கோட் மட்டுமே இடம்பெறும். இதனால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றவர்களுக்கு கிடைப்பது தடுக்கப்படும். QR கோடை ஸ்கேன் செய்தால் மட்டுமே அந்த விவரங்கள் தெரியும். இதனால், இதை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என UIDAI கருதுகிறது.

Similar News

News February 16, 2026

சபரிமலையில் பெண்கள்.. வழக்கில் புதிய உத்தரவு

image

கோயில்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளை விசாரிக்க SC-ன் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் மீது ஏப்.7 முதல் 22-ம் தேதி வரை விசாரணை நடத்தும். இந்த வழக்குகளோடு சேர்த்து, தர்காவில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாதது உள்ளிட்ட வழக்குகளும் விசாரணைக்கு வருகிறது.

News February 16, 2026

காங்கிரஸுக்கு குட்டு வைத்த வைகோ

image

திருக்குறளை ஹிந்தியில் எழுதி வைத்து வாசிப்பதன் மூலம் ஏதோ தமிழர்களை மதிப்பதாக மோடி வேஷம் போடுகிறார் என வைகோ விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், வரும் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்; அப்போது கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது என கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் கேட்பது என்பது காங்கிரஸ் உரிமை, ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

News February 16, 2026

கார்களின் விலை மளமளவென குறைந்தது!

image

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த பிப்ரவரியில் ஜாக்பாட் தள்ளுபடியை கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE

error: Content is protected !!