News March 23, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினியின் மனைவி பதில்

image

திமுக மிரட்டியதால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என <<19363014>>ஆதவ் அர்ஜுனா<<>> பேசியதற்கு லதா ரஜினிகாந்த் பதில் கொடுத்துள்ளார். அவதூறு கருத்துகளை பரப்ப வேண்டாம் என ரஜினிகாந்தே அறிக்கை விட்டுள்ளார் என்ற அவர், தவறான கருத்துகள் அவர் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவரையும் பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். முதலில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்க தயங்கிய அவர், பின்னர் ரஜினி சொன்னதையே பார்க்குமாறு சொன்னார்.

Similar News

News April 11, 2026

தங்கம் விலை இன்று குறைந்தது.. மக்களுக்கு நிம்மதி

image

<<19621607>>தங்கம் விலை<<>> இன்று சவரனுக்கு ₹200 குறைந்த நிலையில், இந்த வார வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. ஏப்ரல் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினாலும், சந்தை நிலவரம் மக்களுக்கு நிம்மதியையே கொடுத்துள்ளது. ஏப்.1-ல் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,12,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹400 மட்டும் அதிகரித்து ₹1,12,800-க்கு விற்பனையாகி வருகிறது.

News April 11, 2026

ஈரான் உச்ச தலைவருக்கு என்ன ஆச்சு?

image

ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி போரில் காயமடைந்ததாக கூறப்பட்டாலும், பொதுவெளியில் இதுவரை தென்படவில்லை. இது மர்மமாக இருந்த நிலையில், அடையாளம் காண முடியாத அளவுக்கு அவருக்கு முகத்திலும், காலிலும் காயம் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் அவர் முகத்தை வெளிக்காட்டாமல், போனில் `வாய்ஸ் கால்’ வழியாக மட்டுமே அரசுக்கும் ராணுவத்துக்கும் வழிகாட்டல்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

News April 11, 2026

விஜய் நல்ல கணவனாக இருக்கணும்: நயினார்

image

திமுகவை ஜெயிக்க வைக்கவே விஜய் தனிக் கட்சி தொடங்கியிருப்பதாக நயினார் பேசியுள்ளார். விஜய் காரைக்குடியில் சைக்கிள் ஓட்டியது வேடிக்கையாக இருந்ததாக கூறிய அவர், திமுகவை ஓட்டுவதற்காக வராமல், சைக்கிள் ஓட்டுவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!