News March 19, 2026
ஆதவ்வால் ஆனந்த் தரப்பு அதிருப்தியா?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் இடையே மோதல்போக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், RK நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் சில தொகுதிகளை ஆதவ் தரப்பு கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இது, இந்த தொகுதிகளில் களப்பணியாற்றி வந்த ஆனந்த் தரப்பினருக்கு வருத்தம் அளித்துள்ளதாம். இதுதொடர்பாக முறையிட்ட நிர்வாகிகளிடம், தன்னையே பாஜகவுடன் பேசுவதாக விஜய் வரை புகார் கூறிவிட்டனர் என ஆனந்த புலம்புவதாக கூறப்படுகிறது.
Similar News
News April 5, 2026
நாயும் பிழைக்கும்.. EPS-க்கு ஆ.ராசா பதிலடி

கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை ஆ.ராசா விமர்சித்ததாக வெளியான ஆடியோவை சுட்டிக்காட்டி EPS சாடியிருந்தார். இந்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பேசுவது அயோக்கியத்தனமானது என்று ஆ.ராசா பதிலளித்துள்ளார். EPS-ஐ மண்டியிட்டு பதவி பெற்றவர் என்றும், அரசியலுக்கு அருகதையற்றவர் எனவும் கடுமையாக விமர்சித்த அவர், ‘ச்சீ! ச்சீ!! நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு’ என காட்டமாக X-ல் குறிப்பிட்டுள்ளார்.
News April 5, 2026
SRH vs LSG: மழை குறுக்கிடுமா?

SRH அணி, RCB-க்கு எதிரான முதல் போட்டியில் தோற்றாலும், KKR-க்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது இருப்பை காட்டியது. இந்நிலையில், இன்று SRH தனது ஹோம் கிரவுண்டில் நடைபெறும் போட்டியில் LSG-ஐ எதிர்கொள்கிறது. அதேநேரம் LSG இப்போட்டியில் வென்றால், இதுவே நடப்பு சீசனில் அணியின் முதல் வெற்றியாகும். இன்று தெலுங்கானாவுக்கு மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
News April 5, 2026
4 நாள்களில் ₹6 கோடி அதிகமான விஜய் சொத்து

பெரம்பூரில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சில திருத்தங்களை மேற்கொண்டு, நேற்று கூடுதல் பிரமாண பத்திரம் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது அசையும் சொத்து ₹410 கோடி என விஜய் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மார்ச் 30-ல் விஜய் நேரடியாக தாக்கல் செய்த வேட்பு மனுவில் ₹404 கோடி என்றே கூறியிருந்தார். தற்போது தனது பிரசார வாகனத்தின் மதிப்பை கணக்கில் காட்டியுள்ளார்.


