News December 30, 2025
ஆண்மையை இழக்க நேரிடும்… ஆண்களுக்கு WARNING!

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: ➤துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது ➤அதிக கொழுப்பு உள்ள பால் பொருள்கள் ➤பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ➤சோயா உணவுகள் – இதன் உட்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். SHARE.
Similar News
News December 31, 2025
திருப்பத்தூர்: வீட்டின் அருகில் குடியிருந்த மலைப்பாம்பு!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மேல்மாமுடிமாணப்பள்ளி விநாயகர் கோவில் வட்டத்தை சேர்ந்த செஞ்சி என்பவரின் வீட்டின் அருகில் நேற்று (30) சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
News December 31, 2025
ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு.. ₹80,915 கோடி நஷ்டம்!

தலைப்பை படித்ததும் நம்ப முடியவில்லையா? உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை 2022-ல் ‘insane’ என கண்டித்தார் ரஷ்யாவின் Tinkoff வங்கியின் நிறுவனர் ஒலெக் டின்கோவ். அந்த ஒரே பதிவு அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பங்குகளை விற்காவிட்டால் வங்கி தேசியமயமாக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் தனது 35% பங்குகளை விற்றுள்ளார். இதன் காரணமாக, அவர் ₹80,915 கோடியை இழந்துள்ளார்.
News December 31, 2025
புத்தாண்டு முதலே சமத்துவம் பொங்கட்டும்: CM

தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக 2026 அமையும் என்று CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயக போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் ஆண்டாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். புத்தாண்டு தொடக்கம் முதலே சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


