News February 10, 2025

ஆண்டியூர் அருகே லாரி மோதியதில் இருவர் படுகாயம் 

image

அரூர் அடுத்த ஆண்டியூர் அருகே டி.அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த டி.அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த கணேசன், (62) ,மாணிக்கம், (60) ஆகியோர் செல்லம்பட்டி சென்று விட்டு  வாகனத்தில் ஆண்டியூர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் இருவருக்கும் கால் முறிந்தது படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 17, 2025

தருமபுரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

image

தருமபுரி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 17, 2025

தருமபுரி: ரயில் விபத்தில் பலி!

image

பொம்மிடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்து கிடந்தார். சேலம் ரயில்வே காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு விசாரித்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 17, 2025

தர்மபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் தடை

image

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னா கரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 பஞ்சாயத்துகள், காரிமங்கலம் 26, பாலக்கோடு 32 மற்றும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்ட ஹள்ளி ஆகிய பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற 18, 19, 20 ஆகிய தேதிகளில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!