News February 8, 2026
ஆண்டிப்பட்டி : கார் மோதி 3 பேர் பரிதாப பலி; இளைஞர் கைது

ஆண்டிப்பட்டி, க.விலக்கு பகுதி பஸ் நிறுத்தத்தில் நேற்று சிலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது இடுக்கியை சேர்ந்த அஜித்குமார் (28) ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்துக்குள் நுழைந்தது. இதில் பால்ராஜ், செல்வம் உள்பட 4 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு GH-ல் சேர்த்தனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர்.
Similar News
News February 12, 2026
தேனி: ரூ.5 லட்சம் வட்டி கிடைக்கும் சேமிப்பு திட்டம்

தேனி தபால் நிலையத்தில் RD கணக்கில் தினமும் ரூ.333 சேமித்தால், 5 ஆண்டுகளில் சுமார் ரூ.6 லட்சம் முதலீடு உடன் ரூ.7,13,659 கிடைக்கும். 10 ஆண்டுகள் தொடர்ந்தால் ரூ.12 லட்சம் முதலீடு ரூ.17,08,546 ஆக உயரும். 6.70% வட்டி மட்டும் ரூ.5 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும். வீடு, வாகனம், குழந்தைகளின் கல்வி போன்ற எதிர்கால தேவைகளுக்கு இது நல்ல சேமிப்பு திட்டம். *ஷேர் செய்யுங்கள்.
News February 12, 2026
தேனி: இவிஎம் செயல் விளக்க மையம் – ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாதிரி செயல் விளக்க மையங்கள் (EVM Demonstration Center) அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த மையங்களில் மாதிரி சின்னங்களைப் பயன்படுத்தி வாக்களித்து, தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!

தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெப் டெவலப்மெண்ட், ரோபோடிக் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 40 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அல்லது 8001858687 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


