News February 25, 2026

ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

image

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம், கொண்டமாநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்

Similar News

News February 25, 2026

தேனி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா.? ரொம்ப EASY.!

image

தேனி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

தேனி: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு.!

image

தேனி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு <>கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

தேனி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!