News November 3, 2025
ஆண்டிபட்டியில் இளம்பெண் தற்கொலை

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் தேவி (35). இவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் தேவி வலியின் வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலியின் வேதனை தாங்காமல் தேவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News November 3, 2025
தேனி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <
News November 3, 2025
போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News November 3, 2025
தேனி: குடிப்பழகத்தால் பறிபோன உயிர்

போடி குப்பிநாயக்கன்பட்டி மருது பாண்டியர் தெருவை சேர்ந்தவர்கள் ராஜபிரபு (35) – கீர்த்தனா (25) தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ராஜபிரபு மது பழக்கத்திற்கு அடிமையாகி, வீட்டில் உள்ள பொருட்கள், குழந்தைகளின் கொலுகளை விற்று மது குடித்துள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.


