News October 12, 2024
ஆண்களுக்கு இலவச பயணம் இல்லையா ?

கள்ளக்குறிச்சி தானம் பகுதியில் இருந்து தியாகதுருகம் செல்லும் அரசு பேருந்தில் ஏறிய, இளைஞர் விஜய் என்பவர், டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளார். அவரிடம் நடத்துநர் டிக்கெட் கேட்டபோது, பெண்களுக்கு மட்டும்தான் இலவச பயணமா, ஆண்களுக்கு கிடையாதா எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் விஜய்யை கீழே இறக்கிவிட்டுள்ளனர். ஆத்திரமடைந்த விஜய், ஓட்டுநரை கல்லால் தாக்கினார். இதில் ஓட்டுநரின் தலையில் காயம் ஏற்பட்டது.
Similar News
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶கள்ளக்குறிச்சியில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு (1/2)

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இந்த பாலிசி குறித்து தெரிந்து கொள்ள கள்ளக்குறிச்சி அதிகாரிகளை (04151-222441) தொடர்பு கொள்ளுங்கள். <<17028497>>தொடர்ச்சி<<>>
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்
▶இந்த லிங்கில் கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.