News January 19, 2026
ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டில் 50,98,474 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 63,25,211-ஐ இது 24.1% அதிகம். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வாகனங்களில் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவற்றில், மாருதி சுசுகி 3.95 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.
Similar News
News January 27, 2026
SPORTS 360: கம்பீருக்கு ரஹானே முக்கிய அறிவுரை!

*டி20 WC முடியும் வரை SM-ல் இருந்து விலகி இருக்குமாறு கம்பீருக்கு Ex வீரர் ரஹானே கோரியுள்ளார். *டி20 WC-ல் ஸ்காட்லாந்தின் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. *ஹீரோ ஹாக்கி இந்தியா லீக்கில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. *டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் 8-வது சுற்றில் உலக சாம்பியன் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். *ஆஸி., ஓபனில் சின்னர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
News January 27, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 27, தை 13 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: நவமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 27, 2026
கலப்பட மஞ்சள் தூளை கண்டுபிடிப்பது ஈஷி!

கலப்பட புகார் காரணமாக, வீடுகளில் மஞ்சள் தூளை பயன்படுத்தும் முன் பரிசோதனை செய்யும்படி TN அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அதன் தரத்தை உறுதி செய்ய, ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நேரத்தில் மஞ்சள் தூள் அனைத்தும் டம்ளரின் கீழே தங்கிவிட்டால் அது சுத்தமான மஞ்சள் தூள். மிதந்தாலோ, அடர் மஞ்சள் நிறமாக மாறினாலோ அது கலப்பட தூள். உடனே டிரை பன்ணி பாருங்க…


