News January 16, 2026
‘ஆட்டு பொங்கல்’ தெரியுமா?

தமிழக மக்களே! மாட்டு பொங்கல் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் ‘ஆட்டு பொங்கல்’ கேள்விப்பட்டு இருக்கீங்களா? நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் மாட்டுப் பொங்கலான இன்று ஆடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் ‘ஆட்டு பொங்கல்’ கொண்டாடப்படுகிறது. சில ஊர்களில், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மட்டுமின்றி, அவற்றைக் காவல் காக்கும் நாய்களுக்கும் மரியாதை செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. உங்க ஊரில் எப்படி?
Similar News
News January 30, 2026
குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

குழந்தைகள் பலரும் இளம் வயதிலேயே போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இப்பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க ✦பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன் உபயோகத்தை குறையுங்க. பெற்றோர் செய்வதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் ✦குழந்தைகளை வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் ✦ஏதாவது கலைத் திறனில் அவர்களை ஈடுபடுத்துங்க.
News January 30, 2026
சண்டையில் சாவு என சொல்வது குற்றமில்லை.. கேரள HC தீர்ப்பு

சண்டையின்போது ‘போய் சாவு’ என்று சொல்வதை தற்கொலைக்கு தூண்டியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கேரள HC தீர்ப்பளித்துள்ளது. தகாத உறவில் இருந்த இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கோபத்தில் செத்து போ என்று கூறியதால், பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்துள்ளது.
News January 30, 2026
துணை முதல்வராகிறாரா அஜித் பவாரின் மனைவி?

அஜித்பவார் விமான விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவர் வகித்த DCM பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அஜித் பவாரின் மனைவியும், MP-யுமான சுனேத்ரா பவார், DCM-ஆக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கையை சுனேத்ரா ஏற்றுக் கொண்டதாகவும், மறைந்த அஜித் பவாரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


