News October 26, 2024

ஆட்டுக்குட்டியை முழுங்கிய நிலையில் மலைப்பாம்பு

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூர் கிராமத்தில் ஆட்டுக்குட்டியை முழுங்கிய நிலையில் மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பை லாபகரமாக பிடித்தனர். பின் மலைப்பாம்பினை வனத்துறையினரிடம் ஒப்படைக்க கொண்டு சென்றனர்.

Similar News

News January 29, 2026

திண்டுக்கல் மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை

image

திண்டுக்கல் மாமன்ற கூட்டத்திற்கு 2 கூட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு நீதிபதி அமர்வு மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

News January 29, 2026

திண்டுக்கல்: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

image

திண்டுக்கல் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<> Aadhaar App <<>>மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 29, 2026

கொடைக்கானல் அருகே விபத்து:5 பேர் காயம்

image

மதுரையைச் சேர்ந்த 5 நண்பர்கள், கொடையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகக் காரில் வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து, மீண்டும் அதே காரில் மதுரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைப்பாதையில் பெருமாள்மலை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

error: Content is protected !!