News July 26, 2024
ஆட்சி செய்யும் பெண் அதிகாரிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலெக்டர் சந்திரகலா, எஸ்பி கிரண்ஸ்ருதி, ஆர்டிஓ பாத்திமா, திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி தலைவிகள் சுஜாதா (ராணிப்பேட்டை), ஹரிணி (வாலாஜா), தமிழ்செல்வி (சோளிங்கர்), தேவி (ஆற்காடு), லட்சுமி (அரக்கோணம்) என்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் 90 % பெண்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
ராணிப்பேட்டை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

ராணிப்பேட்டை மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 12, 2025
ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்

இன்று, (செப்டம்பர் 12) ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. வீட்டு வரி மாற்றம், புதிய மின் மற்றும் குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், மகளீர் உரிமைத் தொகை, மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த மனுக்களை பொதுமக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் அளிக்கலாம். மேலும், இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும்.
News September 12, 2025
வேப்பூர் அருகே வாலிபர் தலை நசுங்கி உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், கே வி குப்பம் சட்டமன்றத் தொகுதியின் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளரான மாளியப்பட்டு வேலு, தேங்காய் வியாபாரம் தொடர்பாக ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் தேங்காய் விற்பனையோடு பம்பை அடிக்கும் தொழிலும் செய்து வந்தார்.