News January 6, 2026

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. லிஸ்ட் போட்ட ஆதவ் அர்ஜுனா

image

TN-ல் இனி எந்த கட்சியும் தனித்து ஆட்சியில் அமர முடியாது என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற சுயமரியாதை முழக்கம் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 2024 LS தேர்தல் வெற்றியின் அடிப்படையில் திமுக கூட்டணியில் காங்-க்கு-54, VCK, CPM, CPI-க்கு தலா 12, MDMK, IUML-க்கு தலா 6 தொகுதிகளை தற்போது வழங்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 10, 2026

உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது: FAI

image

வரவிருக்கும் காரீஃப்(june-nov) சாகுபடி பருவத்திற்கு போதுமான உரம் இருப்பு உள்ளதாக இந்திய உர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 6 நிலவரப்படி 177.31 லட்சம் டன்கள் கையிருப்பு இருப்பதாகவும், இதில் 59.30 லட்சம் டன் யூரியா, 25.13 லட்சம் டன் DAP & 55.87 NPKS லட்சம் டன் ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், எரிவாயு விநியோகம் குறைவது உள்நாட்டு யூரியா உற்பத்தியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

News March 10, 2026

FLASH: வெள்ளி விலை இன்று ₹10,000 உயர்ந்தது!

image

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹10 உயர்ந்து ₹300-க்கும், கிலோ வெள்ளி ₹10,000 உயர்ந்து ₹3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் வெள்ளி விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 10, 2026

கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில்

image

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக Indian Oil நிறுவனம் அறிவித்துள்ளது. வளைகுடா போரால் உலகளவில் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், மாற்று எரிசக்திகளை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, வேலை நேரத்தை குறைக்க ஹோட்டல்கள் முடிவு எடுத்துள்ளன. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் சேவையும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!