News August 26, 2024

ஆட்சி அதிகாரத்தில் பங்கு: விசிக

image

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே விடுதலை சிறுத்தை (விசிக) நிலைப்பாடு என்று அக்கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் இக்கோரிக்கை எழுந்திருப்பது குறித்த கேள்விக்கு, அது விசிக நீண்டகாலமாக முன்வைக்கும் கோரிக்கை. அதுதான் உண்மையான சமத்துவம் என்று அவர் பதிலளித்தார். மாநில காங்கிரஸ் தலைவர்களும், இக்கோரிக்கையை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 6, 2025

பிஹாரில் வாக்குப்பதிவு நிறைவு

image

பிஹாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதிகபட்சமாக பெகுசராய் தொகுதியில் 67.32%, குறைந்தபட்சமாக ஷேக்புரா தொகுதியில் 52.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.

News November 6, 2025

சற்றுமுன்: விஜய்க்கு அஜித் மீண்டும் ஆதரவு

image

கரூர் விவகாரத்தில் <<18163956>>விஜய்க்கு ஆதரவாக அஜித்<<>> பேசியதாக தவெகவினர் SM-ல் பதிவிட்டு வந்தனர். அதேநேரத்தில், கூட்டம் கூட்டுவதை அஜித் விமர்சித்ததை, விஜய்க்கு எதிராக பேசியதாக மற்றொரு தரப்பு கூறியது. இந்நிலையில், தனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது என அஜித் தெரிவித்துள்ளார். விஜய்க்கு நல்லதையே தான் நினைத்திருக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

News November 6, 2025

நுரையீரலே இல்லாமல் சுவாசிக்கும் அதிசய உயிரினம்

image

உருவத்தில் சிறிதாக இருப்பதால் நம்மை போல நுரையீரல் எறும்புகளுக்கு இல்லை. மாறாக, தனது உடலில் உள்ள Spiracles எனப்படும் துளைகள் வழியாகத்தான் இவை ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றன. துளை வழியாக உள்ளே செல்லும் ஆக்சிஜன் டிராக்கியா (Tracheae) எனப்படும் நுண்ணிய குழாய்கள் மூலம் செல்களுக்கு செல்கிறது. கார்பன் டை ஆக்சைடும் அதே வழியில் வெளியேறுகிறது. 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.

error: Content is protected !!