News January 19, 2026
ஆட்சியில் விசிகவுக்கு பங்கு உள்ளது: சிந்தனைச்செல்வன்

கடந்த 75 ஆண்டுகளில் சாதிக்க முடியாதவற்றை 5 ஆண்டுகளில் விசிக சாதித்துள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் கூறியுள்ளார். பட்டியலின மக்களுக்கான பல சட்டத்திருத்தத்தை விசிக கொண்டு வர வைத்துள்ளது என்ற அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக நிறைவேற்றிய நிறைய திட்டங்கள் விசிகவின் கொள்கை அரசியலில் உள்ளது என்றார். அந்தவகையில், ஆட்சி அதிகாரத்தில் விசிகவின் பங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
NDA கூட்டணியில் இணையும் புதிய கட்சி?

அடுத்த வாரத்திற்குள் NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என நயினார் கூறியிருந்தார். இந்நிலையில், நயினாரை தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு திரு.வி.க. நகர் தொகுதி ஒதுக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
News January 27, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாற்றம்

2024-ம் ஆண்டு முடிவில் ₹96,748-ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை, 2025-ல் ₹1,38,000-ஆக உயர்ந்தது. இந்நிலையில், 2026-ல் 10 கிராம் தங்கத்தின் விலை 30% அதிகரித்து ₹1,80,000-ஆக உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், உலகளவில் அரசியல் பதற்றம் தொடர்ந்து நீடித்தால், இன்னும் 6 மாதங்களில் தங்கம் விலை கணித்ததை விட மேலும் உயரக்கூடும் எனவும் கூறுகின்றனர்.
News January 27, 2026
குழந்தைகளுக்கு டயப்பர் போடுறீங்களா? கவனம்

*டயப்பரை 4 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும் *ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை என்று சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்துவதைத் தவிருங்கள் *குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய் போட்டுவிட்டு பிறகு டயப்பர் போட்டுவிடுவது புண் ஏற்படாமல் தடுக்கும் *Alcohol based டயப்பரை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.


