News January 25, 2026

ஆட்சியில் பங்கு: ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன ராகுல்

image

ஆட்சியில் பங்கு தர வேண்டும் எனப் பேசி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சர்ச்சையில் மையப்புள்ளியாக இருந்தவர் மாணிக்கம் தாகூர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் MP கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது கருத்துகளை ராகுலிடம் தெளிவாக விளக்கிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.

Similar News

News February 9, 2026

ரீசார்ஜ் பண்ணாமலே போன் கால் செய்யலாம் தெரியுமா…

image

போனில் ரீசார்ஜ் இல்லை, உடனே யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால், இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. ஆனா, ஒரு கண்டிஷன், இதற்கு போனில் WiFi அழைப்பு வசதி இருக்க வேண்டும். *Settings-> Network & Internet-ஐ கிளிக் பண்ணுங்க *அதில், SIM card & Mobile network-ஐ தேர்ந்தெடுக்கவும் *WiFi Calling dongle-ஐ கிளிக் செய்து, எந்த SIM என்பதை கிளிக் செய்து, WiFi calling-ஐ ஆன் செய்தால் போதும். ஈசியாக போன் பேசலாம்.

News February 9, 2026

கூட்டணியில் சேர தூது.. சசிகலா வைத்த டிமாண்ட்!

image

NDA-வில் சேர சசிகலா விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், EPS தனக்கு நெருங்கிய தொழிலதிபர் ஒருவர் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அப்போது, தன்னுடன் இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன், Ex அமைச்சர் ஆனந்தன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என சசிகலா கேட்டாராம். இதனை கேட்ட EPS, முதலில் ஆதரவு கடிதம் கொடுத்தால் சீட்டு பற்றி பேசலாம் என கூறிவிட்டாராம்.

News February 9, 2026

FLASH: உப்பு விலை தலைகீழாக குறைந்தது

image

வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் முன்கூட்டியே உப்பு உற்பத்தி செய்யும் பணி தூத்துக்குடி உப்பளங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பழைய உப்பு 1 டன் ₹3,000 வரை விற்பனையான நிலையில், தற்போது ₹1,200-க்கு வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய உப்பும் 1 டன் ₹1,300-க்கே விற்கப்படுகிறதாம். தற்போது 1 கிலோ உப்பு ₹20 வரை விற்கப்படும் நிலையில் விலை குறைய வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் விலை என்ன?

error: Content is protected !!