News January 4, 2026

ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை: KS அழகிரி

image

அதிக இடங்களில் போட்டியிடவேண்டும் என்று நினைப்பதோ, ஆட்சி அதிகாரத்தில் பங்குவேண்டும் என்று கேட்பதோ தவறுகிடையாது என அழகிரி கூறியுள்ளார். மத சார்பின்மைக்காக காங்.,க்கு திமுகவைவிட சிறந்ததோழன் வேறு யாரும் இல்லை என்ற அவர், திமுக கூட்டணியிலிருந்து காங்., ஒருபோதும் வெளியேறாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மதச்சார்பின்மை என்ற ஒற்றைநோக்கமே அனைவரையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுசெல்கிறது எனவும் பேசியுள்ளார்.

Similar News

News February 8, 2026

திருப்பூர்: இனி Whats app மூலம் வரி செலுத்தலாம்

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம். (SHARE)

News February 8, 2026

40 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயம் செய்யணும்!

image

40 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!

News February 8, 2026

நாளை இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது!

image

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், மதுக் கடைகள் நாளை 3 மணி நேரத்துக்கு இயங்காது என டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை பகல் 12 மணி முதல் 3 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!