News January 12, 2026
ஆட்சியில் பங்கு கேட்க உடன்பாடில்லை: வைகோ

திமுகவை ஒருபோதும் இந்த பூமியில் இருந்து யாராலும் அகற்ற முடியாது என வைகோ கூறியுள்ளார். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக உடன் கூட்டணி வைத்ததாக கூறிய அவர், இந்த முடிவில் எப்போதும் உறுதியாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை எனவும் பேசியுள்ளார்.
Similar News
News February 13, 2026
ராசி பலன்கள் (13.02.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News February 13, 2026
விமான விபத்தின் விசாரணை முடியவில்லை

2025-ல் அகமதாபாத்தில் நடந்த <<19118354>>ஏர் இந்தியா விமான<<>> விபத்தை அதனை இயக்கிய பைலட் ஏற்படுத்தியிருக்கலாம் என செய்திகளில் தகவல் வெளியாகின. அதேபோல் விசாரணை முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விபத்து தொடர்பான விசாரணை நிறைவடைந்ததாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை எனவும், இடைக்கால விசாரணை அறிக்கை சில தகவல்களை மட்டுமே வழங்கியது எனவும் மத்திய விமான துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News February 13, 2026
படுக்கைக்கு அழைப்பு.. பிரபல நடிகை பரபரப்பு

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சிலரால் சினிமாவின் தரம் கெடுவதாக நடிகை எஸ்தர் நோரானா கூறியுள்ளார். இந்த தலைமுறையினர் சினிமாவில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுப்பதாக கூறிய அவர், முன்பு அப்படி இல்லை என்றார். வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள் தவறானவர்கள் என்றால், அதற்கு உடன்படுவோரும் தவறானவர்கள்தான் எனவும் தெரிவித்தார். இவர் தமிழில் ‘கேம் ஆப் லோன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.


