News January 7, 2026
ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்: அழகிரி

ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்பதால், அதிகாரத்தில் பங்கு கேட்பது நியாயமானது என காங்கிரஸின் KS அழகிரி தெரிவித்துள்ளார். வைகோ, திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டுகள் அதிக தொகுதி கேட்கின்றனர் என தெரிவித்த அவர், தங்களை பொறுத்தவரை திமுக தோழமை கட்சி என்பதால் பேரம் பேச தேவையில்லை என கூறியுள்ளார். அதேசமயம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
ஷாக்கைக் குறைங்க முதல்வரே: நயினார்

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, வெற்றித் தலைவன் மோடி வருவதற்கு முன்னே வழக்கம் போல, வெற்றுப் புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது என்று ஸ்டாலினுக்கு நயினார் பதிலடி கொடுத்துள்ளார். உங்களது அத்தனைப் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த ஒரு புகைப்படமே (மேலே 2-வது போட்டோ) பதில். அதை பார்த்தபின், ஷாக்கைக் குறைத்து புரட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள் என விமர்சித்துள்ளார்.
News January 23, 2026
PM மோடியின் கூட்டத்தில் கவனத்தை ஈர்த்த சிறுமி!

மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் சிறுமி ஒருவரின் ஓவியம் PM மோடியின் கவனத்தை ஈர்த்தது. மேடையில் இருந்தவாறே சிறுமியின் கையிலிருந்த ஓவியத்தை கவனித்த அவர், தனது தாயாரின் ஓவியத்தை கையில் வைத்துள்ள சிறுமியின் பெயர், முகவரியை கேட்டுப் பெறுமாறு தனது உதவியாளருக்கு அறிவுறுத்தினார். தான் டெல்லி சென்ற பிறகு அந்த சிறுமிக்கு கடிதம் எழுதுவதாகவும் கூறியதால் அங்கு கரகோஷம் எழுந்தது.
News January 23, 2026
அமைச்சர் நேரு வழக்கில் அரசுக்கு கூடுதல் நெருக்கடி

அமைச்சர் கே.என்.நேரு மீதான ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில், FIR பதிவு செய்ய அதிமுக சார்பில் சென்னை HC-ல் <<18786820>>மனு தாக்கல்<<>> செய்யப்பட்டிருந்தது. இதை இன்று விசாரித்த கோர்ட் தமிழக அரசு வரும் 28-ம் தேதிக்குள் பதிலளிக்கவும், டிஜிபி வசம் ED அளித்துள்ள ஆதாரங்களை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.


