News July 18, 2024
ஆட்சியர் மெர்சி ரம்யாவிற்கு புதுகை எம்எல்ஏ வாழ்த்து

கடந்த ஓராண்டு காலமாக புதுக்கோட்டையின் மாவட்ட ஆட்சித் தலைவராக செயல்பட்டு, தற்போது புதுக்கோட்டையிலிருந்து விடைபெற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனராக பணி மாறுதலில் செல்லும் ஐ.சா.மெர்சி ரம்யாவை மரியாதை நிமித்தமாக இன்று (ஜூலை.18) புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News November 4, 2025
புதுக்கோட்டை: வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.05) மற்றும் நவ.06ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!
News November 4, 2025
புதுக்கோட்டை: பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
புதுகை: வாகனம் மோதி விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே குமரப்பன் வயல் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதில் அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்டு தகவல் அளித்ததன் பெயரில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது குறித்து மீமிசல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


