News January 31, 2025
ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் இன்று (31.01.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கோமதி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கதிரேசன் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News March 1, 2026
கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
கடலூர்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News March 1, 2026
கடலூர்: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் மார்ச் 2 மற்றும் மார்ச் 3 ஆகிய இரண்டு நாட்கள், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் இந்த நாட்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


